தன்னைத் தானே சுட்டு கடற்படை சிப்பாய் தற்கொலை..!! மரணத்தின் பின்னனி என்ன.?

கடற்படை சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த கடற்படை சிப்பாய் கிளிநொச்சி முழங்காவில் கடற் படை முகாமில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.இது குறித்து மேலும் தெரிய வருகையில் கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடல் பரப்பில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை எடுத்து தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இறந்த இராணுவ வீரர் தனுஸ்கயான் பிரேமரத்ன மைத்திரிகம சிரிபுர பகுதியைச் சேர்ந்த கடல்படை சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்.முழங்காவில் போலீசார் குறித்த இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.