ஒன்றரை வயது குழந்தையை காவுகொண்ட கிணறு..!

பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரி, நெடுங்குளம் பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் நேற்று (21/12/2023) கிளிநொச்சி பூநகரி 4ம் கட்டை நெடுங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் சடலம் பூநகரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.