கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இளைஞன்..! சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்கள் கைது..

சித்திரவதை கூடமாக இயங்கி வந்த வீடு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.களுத்துறையில் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய சண்டையில் நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.களுத்துறை, கலமுல்ல, லாகோஸ்வத்த பிரதேசத்தில் வைத்து 18, 20, 25, 27 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தப் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ​​வீடு புகுந்த போது வீட்டில் இருந்த பலர் தப்பி ஓடியுள்ளனர்.இதன்போது வீட்டில் கை கால்கள் கட்டப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இளைஞனை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.அந்த வீடு சித்திரதைக்கூடம் போன்று செயற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சோதனையின் போது இளைஞனை தாக்கிய 3 கூரிய வாள்கள், போதைப் பொருட்கள் அடங்கிய சிறிய பொதிகள், ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மற்றும் பொதியிடும் பொருட்கள் என்பன காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *