சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு..!!
![](https://www.tamildesk.com/wp-content/uploads/2024/03/fb-post-2-11.jpg)
சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளன.இதன் படி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கையில்,
ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அத்துடன் மாவின் விலை கிலோகிராம் ஒன்றின் விலை 190 ரூபாவிலிருந்து 175 ரூபாவாகவும் பருப்பு ஒரு கிலோகிராம் ஒன்றின் விலை 350 ரூபாவிலிருந்து 285 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.