இறப்பர் தோட்டத்தில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த சடலம்..!! தீவிர விசாரணையில் பொலிஸார்.!

நேற்று (13/03/2024) மாத்தறை வெலிகம உடுகாவ பிரதேசத்தில் உள்ள இறப்பர் தோட்டம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் வெட்டுக் காயங்களுடன் உயிரிழந்த நபரின் சடலம் ஒன்றை பிரதேசவாசிகள் கண்டறிந்துள்ளனர்.இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் குடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சோதனையிட்ட போது இறந்தவரின் காற்சட்டைப் பையில் பணமும் வங்கிப் பற்றுச்சீட்டும் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவரின் கால்கள் மற்றும் மார்பில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.இந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.