யாழ்ப்பாணத்தில் நடந்த அதிசயம்..!! சிவலிங்க திருவுருவத்தை சுற்றிய நாகம்..!!

வெள்ளை நாகம் ஒன்று சிவலிங்கத்தை சுற்றி வரும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைராலாகி வருகின்றது.குறித்த நிகழ்வானது யாழ்ப்பாணத்தின் வலி வடக்கில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட காங்கேசன் துறை பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றிலேயே நடந்துள்ளது. யாழ்ப்பாணம் வலி வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பொதுமக்களின் காணிகள் மூன்று தசாப்தங்களின் பின்னர் கடந்த 10ம் திகதி விடுவிக்கப்பட்டிருந்தன.

இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த காங்கேசன்துறை தெற்கு பகுதியில் இராணுவத்தினரால் சிறு கோயில் போன்ற அமைப்புக்குள் பிள்ளையார் , சிவலிங்க உருவங்களும் இலட்சுமின் உருவப்படமும் வைத்து வழிபாடாற்றப்பட்டிருந்தது.இந்நிலையில் காணி விடுவிக்கப்படுவதற்கு முந்திய காலப்பகுதியில் வெள்ளை நாகம் ஒன்று சிவலிங்கத்தை சுற்றிவளைக்கும் காணொளி இராணுவத்தினரால் பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதேசமயம் குறிப்பாக இந் நாக பாம்பானது வெள்ளி , பௌர்ணமி தினங்களில் ஆலய வழிபாட்டிடத்திற்கு வருகை தருவதாக இராணுவத்தினர் தெரிவித்திருந்தததாக அங்கு சென்றவர்கள் கூறியுள்ளனர்.தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மிகவும் அரிதாகக் கருதப்படும் வெள்ளைப் பாம்பு சிவலிங்கத்தை தரிசித்த சம்பவம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.