தொடருந்து ஆசன முன்பதிவு குறித்து புதிய அறிவிப்பு..!! தொடருந்து திணைக்களம் தெரிவிப்பு..!

இலங்கையில் தொடருந்து ஆசன முன்பதிவுகளை இன்று முதல் முழுமையாக ஆன்லைனில் மேற்கொள்ள முடியும் என ரயில்வே அமைச்சு அறிவித்துள்ளது.இன்று இரவு 7 மணி முதல் ரதொடருந்து ஆசனங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுவரை 40 சதவீத இருக்கை முன்பதிவுகள் இணையதளம் வழியாக மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் இணையதளம் மூலம் மட்டுமே இருக்கை முன்பதிவு செய்ய முடியும்.இது தவிர அரச ஊழியர்களுக்கான இலவச அனுமதிப்பத்திரத்தையும் இணையம் மூலம் முன்பதிவு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.அதற்காக கட்டணம் வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்றும், அவ்வாறு பணம் வசூலிக்கப்படும் என்ற வதந்தி பொய்யானது என்றும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.