வர்த்தகர்களை குறிவைத்து இடம் பெற்று வரும் மோசடி..!! மக்களுக்கு எச்சரிக்கை..!

சுகாதார பரிசோதகர்கள் போன்று நடித்து வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகள் மேற் கொண்டு மோசடிகள் இடம்பெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.மேலும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கடந்த சில நாட்களாக இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள் போல் நடித்து தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்பவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மேலும், நட்சத்திர ஹோட்டல்களுக்கும் அழைப்பினை ஏற்படுத்தி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் போல் நடித்து பணம் கேட்பதாகவும், சில தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் பறித்த வழக்குகள் அதிகளவில் குவிந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக காவல் நிலையங்களுக்கு அதிக அளவில் புகார்கள் வருவதால், இதுபோன்ற அழைப்புகளைத் தவித்து, அருகிலுள்ள காவல் நிலையங்களில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.