இனந்தெரியாத நபர்களால் கொழும்பில் துப்பாக்கி சூடு..!!

மர்ம நபர்களால் நடத்தப்பட துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயத்திற்குள்ளாகியுள்ளார்.குறித்த சம்பவம் கொழும்பு –  மோதரை பொலிஸ் பிரிவில்  மோதரை வீதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.முகத்துவாரம் சாலை பகுதியிலிருக்கும் உணவகம் ஒன்றில் முகாமையாளராக பணிபுரியும் குறித்த நபர், நேற்றய தினம் இரவு உணவகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த போது காரில் வந்த இனந்தெரியாத மர்பநபர்களால் குறித்த நபர் மீது இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் 51 வயதான கொழும்பு -14 மஹவத்தை பகுதியை சேர்ந்த நபரே காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த துப்பாக்கிச் சூட்டுக்காக கைத்துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.