வீட்டின் அறையொன்றிலிருந்து இளம் தாய் மற்றும் 2 வயது குழந்தையின் சடலங்கள் மீட்பு..!

இளம் தாய் மற்றும் 2வயது குழந்தையின் சடலங்கள் இரத்தினபுரி – கெஹெல்ஓவிடிகம பிரதேசத்தில் தொடர் குடியிருப்பு அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.சிவநாதன் வசந்தகுமாரி என்ற 21 வயதுடைய தாயும் இரண்டு வயது ஆண் குழந்தயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தாயே ​​குழந்தையைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.இவரது கணவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபத பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.