யாழ் நல்லூர் பகுதியில் 61 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு..!!

ஜெகநாதன் என்ற 61 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் யாழ்ப்பாணம் – நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இந்த மரணம் சில நாட்களுக்கு முன் நடந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதனைத் தொடர்ந்து, இன்று சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பொலிஸார் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த சம்பவம் கொலையா அல்லது தவறான முடிவா என்பது விசாரணைகளின் பின்னரே தெரியவரும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.