கொழும்பு மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து..!கொழும்பு மாநகர சபை தெரிவிப்பு..

கொழும்பு மாநகர சபை மக்களை அவதானமாக இருக்கும் படியும்,பொரளை பிரதேசத்தில் அதிகளவான மரங்கள் முறிந்து விழும் அபாயத்தில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பொரளை பிரதேசத்தில் ஆபத்தில் உள்ள 97 மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன. கொழும்பு மாநகர சபையின் அதிகார வரம்பிற்குள் 329 ஆபத்தில் உள்ள மரங்கள் இனங்காணப்பட்டுள்ளன.சமகாலத்தில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரங்கள் முறிந்து விழும் அபாயம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.கொழும்பு நகரில் அபாய நிலையில் உள்ள 360 மரங்கள் தொடர்பில் பொதுமக்களும் பொலிஸாரும் கொழும்பு மாநகர சபைக்கு அறிவித்துள்ளனர்.கொழும்பு நகரில் ஆபத்தான 214 மரங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களத்தின் நிபுணர்கள் குழு அண்மையில் கொழும்பு நகரில் அழிந்து வரும் மரங்களை ஆய்வு செய்ததுடன், 700 மரங்கள் பரிசோதிக்கப்பட்டன.நாட்டின் எந்தவொரு நகரத்திலும் ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குறிப்பிட்ட மரங்களை வெட்டுவதற்கான பரிந்துரைகளைப் பெறுவதில் சிக்கல்கள் இருப்பதாக மாகாண மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர தெரிவித்தார். கொழும்பு நகரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான 558 மரங்கள் ஆபத்தானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அவற்றில் 214 மரங்கள் கொழும்பு மாநகர சபையின் தலையீட்டின் மூலம் அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *