3 நாட்களாக அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த சடலம்..!

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பின் அறை ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.தொலைபேசி அழைப்பின் ஊடாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர்.40 முதல் 50 வயதுடைய ஒருவரே மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் இறந்து மூன்று நாட்கள் ஆகியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.இது தொடர்பான விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸ நீதவான் அழைக்கப்பட்டதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.