மது போதையில் வந்து சக பொலிஸாருடன் முரண்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்..!!

யாழ் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் விடுதியில் இனவாதக் கருத்துகளை கூறி சக ஊழியர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (25ஆம் திகதி) மாலை மது போதையில் உள்நுழைந்து சக பொலிஸ் அதிகாரிகளுடனும் தமிழ் பொலிஸ் அதிகாரிகளுடனும் இனவாதக் கருத்துக்கள் மூலம் முரண்பாட்டில்  ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை (26) யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதை அடுத்து இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.இதேவேளை, நிர்வாக விசாரணைகளை மேற்கொண்ட மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.