இடமாற்றத்தால் தீக்குளிக்க முற்பட்ட ஆசிரியர்..!! காரணம் பாடசாலையின் தலமை ஆசிரியரா..?

பாடசாலை ஆசிரியர் ஒருவர் இடமாற்றத்தால் பாடசாலை வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அந்த இடத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவமானது மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கடமையாற்றும் ஆசியை ஒருவரே நேற்றையதினம் இவ்வாறு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது. மேலும், கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த அதிபர் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்று சென்றதனையடுத்து புதிதாக அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

புதிய அதிபருக்கும் ஆசிரியைக்கும் இடையில் தெடர்ச்சியாக முரண்பாடு நிலவி வந்ததாக கூறப்படும் நிலையில் , வலயம் விட்டு வலயம் இடமாற்றம் செய்யப்பட்டு மாகாண கல்வி திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட இடமாற்ற பட்டியலில் ஆசிரியையின் பெயர் இடம் பெற்றுள்ளது.இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர் இடமாற்றத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.எனினும் நேற்றைய தினம் இடமாற்றக் கடிதம் கிடைத்ததையடுத்து உடனடியாக அனைத்துப் பொறுப்புக்களிலும் இருந்து விலகுமாறு அதிபர் வற்புறுத்தியதால் விரக்தியடைந்த ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியையின் இந்த செயலால் அதிர்ச்சியடைந்த சக ஆசிரியர்கள், அவ் ஆசியையை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றி மட்டு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. சம்பவம் தொடர்பில் பாடசாலை கல்வி சமூகத்தினர் மேல் அதிகாரிகளிடம் முறையீடு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. அதேசமயம் மேற்படி பாடசாலையின் அதிபர் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் உயர் பதவியில் இருப்பவர் என்றும் கூறப்படுகின்றது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *