வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை..!!

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை எதிர்கால தேர்தல்களில் பங்கேற்க அனுமதிக்கும் யோசனையை தேர்தல்கள் ஆணைக்குழு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக சிவில் சமூக அமைப்பு ஒன்றின் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டில் பணிபுரியும் அல்லது இரட்டைக் குடியுரிமை கொண்ட ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் வாக்களிக்க விரும்புவதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்காலத்தில் இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்தந்த நாடுகளில் இருந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இந்தநிலையில் தமது கோரிக்கைக்கு தேர்தல் ஆணையம் சாதகமான பதிலை வழங்கியதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது.