காதலி இறந்து ஐம்பதாவது நாளில் காதலன் எடுத்த விபரீத முடிவு..!!

யாழ்ப்பாணத்தில் காதலி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுடன் காதலனும் விபரீத முடிவெடுத்து 50வது நாளில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.20 வயதுடைய தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த இளைஞரின் காதலியான தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் கடந்த 50 நாட்களுக்கு முன்னர் தவறான முடிவினை எடுத்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த இளைஞர் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.மேலும், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.