கனடா விசாவால் நேர்ந்த சோகம்..!!மாற்றுத்திறனாளி ஒருவர் மரணம்..!

தவறான முடிவெடுத்து மாற்று திறனாளி ஒருவர் கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துகொண்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் பெரும் துயரத்தையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவமானது (11-03-2024) அன்று தெல்லிப்பழையில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்தில் அக்குடுவன, கொல்லங்கலட்டி, தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 32 வயதான தனபாலசுப்பிரமணியம் சுஜீவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரிய வருகையில் குறித்த நபரின் சகோதரி கனடாவில் வசித்து வருகிறார்.

இதன் மூலம் இறந்தவர் மற்றும் அவரது தாயாருக்கு கனடாவிற்கு சுற்றுலா விசா கிடைத்துள்ளது.ஆனால் குறித்த நபருக்கு கனடா செல்வதில் விருப்பம் இருக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது சக்கர நாற்காலியை கிணற்றுக்கு அருகே நிறுத்திவிட்டு கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.இந்நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, உடல் (12-03-2024) அன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.