தமிழக மக்களை கண்ணீரில் ஆழ்த்திய துயரம்..!கேப்டன் விஜயகாந்த் மறைவு..

நடிகரும், தே.மு.தி.கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் சற்று முன் உயிர்ழந்தார்.அனைவராலும் விரும்பப்பட்ட கேப்டன் விஜயகாந்த் இப்போது நம்முடன் இல்லை என்பது சோகத்தின் உச்சமாக கருதப்படுகிறது.இந்த செய்தி வரக்கூடாது என்று தமிழக மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்தனர் ஆனால் அது பயனற்று போய்விட்டது.

கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்ட கேப்டன் விஜயகாந்திற்கு இன்று காலை மருத்துவர்கள் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்தனர்.ஆனால், சிகிச்சை பலனின்றி சற்று முன்பு மரணம் அடைந்திருக்கிறார் விஜயகாந்த்.இது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் மிகப்பெரும் துயரமே.இதற்கு தற்போது பல அரசியல் தலைவர்களும், நடிகர்களும் தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.