இரண்டு நாட்களில் நாட்டில் 10 பேர் மாயம்..!!

இரண்டு வயது சிறுமி மற்றும் பாடசாலை மாணவி உட்பட 10 பேர் இரண்டு நாட்களில் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் (08) மற்றும் நேற்று (09) அனைவரும் காணாமல் போயுள்ளனர்.மேலும் காணாமல் போன இரண்டு வயது சிறுமி வெலிபன்ன பத்தினியாகொட பகுதியைச் சேர்ந்தவர். குறித்த சிறுமியும் அவரது முப்பது வயதுடைய தாயும் கடந்த 9ஆம் திகதி முதல் காணவில்லை என பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.காணாமல்போன பெண் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்தவர் என்று கூறப்படுகிறது.

வரக்காபொல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய நபர், மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய பெண், முல்லேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவர், தம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், அம்பாறை கார்த்திவ் பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவர், மற்றும் வவுணதீவு பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மீனவர் ஒருவரும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.மேலும், மெதகம பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடைய மனநலம் குன்றியவர் ஒருவரும் காணவில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை நேற்று முதல் காணவில்லை என உறவினர்கள் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *