போதைப்பொருளுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது..!

16 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வவுனியா விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து மேற்கொண்ட விசேட சோதனையின் போது மீட்கப்பட்டுள்ளது.மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்களை போதை பொருளை தங்கள் உடைமையில் வைத்திருந்த‌ குற்றச்சாட்டில் கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (22) தெரிவித்தனர். பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய விசேட போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையை நாடளாவிய ரீதியில் விசேட அதிரடிப் படையினர் மற்றும் பொலிசார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.அதற்கு அமைய வவுனியாவில் […]

ஒன்றரை வயது குழந்தையை காவுகொண்ட கிணறு..!

பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநகரி, நெடுங்குளம் பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் நேற்று (21/12/2023) கிளிநொச்சி பூநகரி 4ம் கட்டை நெடுங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் சடலம் பூநகரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த இளைஞன்..! சுற்றிவளைப்பில் சிக்கிய நபர்கள் கைது..

சித்திரவதை கூடமாக இயங்கி வந்த வீடு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.களுத்துறையில் போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய சண்டையில் நபர் ஒருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிய கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.களுத்துறை, கலமுல்ல, லாகோஸ்வத்த பிரதேசத்தில் வைத்து 18, 20, 25, 27 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, ​​வீடு புகுந்த போது வீட்டில் இருந்த பலர் தப்பி ஓடியுள்ளனர்.இதன்போது வீட்டில் கை கால்கள் […]

இலங்கையில் புதிய வகை கொரோனா வைரஸ்..!

ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார்.தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.கொவிட்-19 சோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதால், அதன் உண்மையான தரவுகளை பெற முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுகின்றன. அதிக பாதிப்பினை எதிர்கொள்ளும் தரப்பினர் பூஸ்டர் […]

வவுனியா பாவற்குளத்தில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு..!

அடையாளம் தெரியாத யுவதி ஒருவரின் சடலத்தை வவுனியா பாவகுளத்தில் இருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்று வியாழக்கிழமை (21) மாலை பாவற்குளம் பகுதிக்கு சென்ற யுவதி ஒருவரே குளத்தில் விழுந்துள்ளார். இதனை அவதானித்த சிலர் உடனடியாக விரைந்து செயற்பட்டு பெண்ணை மீட்டதுடன் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.எனினும் மீட்கப்பட்ட பெண் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முன்னரே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் 18 மற்றும் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணே சடலமாக மீட்கப்பட்டதுடன், அவர் இதுவரை அடையாளம் […]

என்ன ராதிகா இதேல்லாம் இப்புடி இடுப்ப காட்டிற்று இருக்கிங்க..! நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியின் லேட்டஷ்ட் க்ளிக்ஸ்..

பாக்யலட்சுமி சீரியலில் ராதிகாவாக ரேஷ்மா பசுபுலேட்டி நடிக்கிறார். இதற்கு முன் படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்த இவர் தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார்.நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரியான இவர் இப்போது ஜீ தமிழில் சீதா ராமம் என்ற தொடரிலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சீரியல்களில் நடிப்பதை தாண்டி ரேஷ்மா நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இன்ஸ்டாக்ராமில் ஆக்டிவாக இருந்து வரும் ரேஷ்மாவுக்கு 1.4 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக தொடர்ந்து போட்டோக்கள் […]

வேலைவாய்ப்பு-Sales Rep

Vacancy Area Jaffna ~Company (Premix) Shalight & I-Shine ~Good Attractive package Salary ~Basic Salary – 30,000/= ~Base Allowance -3,000/ ~Lunch Allowance -8400/= ~Incentive -above 80,000/= Experience ~Minimum 1years in FMCG Contact Number ~0740602839