32 வயதுடைய இளைஞரின் கேவலச் செயல்..!!பொலிஸாரல் கைது.!

32 வயதான இளைஞர் ஒருவர் 15 வயது சிறுமி ஒருவரை உறவினர் வீடு ஒன்றுக்கு ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும்,இச் சம்பவமானது மீகஹகிவுல , களுகஹகந்துர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனவும் தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான இளைஞனை பதுளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் சம்பவம் தொடர்பில் கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.