வெளிநாட்டு ஆசைகாட்டி மக்களிடம் பணமோசடி செய்த பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது..!!

1 கோடியே 25 இலட்சம் ரூபா பணத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரிடம் கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினராகி சிறிது காலத்திலேயே இவர் வெளிநாடு சென்றுள்ளார்,பின்னர் நாட்டுக்கு திரும்பிவந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.2022-2023 காலப்பகுதியில் கட்டம் கட்டமாக‌ 1 கோடியே 25 இலட்சம் ரூபா பணத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பணத்தை பெற்றுள்ளார்.

எனினும் குறித்த நபரை வெளிநாடு அனுப்பாது இழுத்தடிப்பு செய்த நிலையில், சம்பந்தப்பட்டவர் அது தொடர்பில் வினவ ஆரம்பித்த போது, முன்னாள் பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவாகி விட்டார்.மேலும், சந்தேகநபர் திருகோணமலை உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறான பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சந்தேக நபருக்கு எதிராக திருகோணமலை மற்றும் மல்லாகம் நீதிமன்றங்களில் பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.பணம் மோசடி செய்து ஆடம்பரமாக செலவு செய்வதே அவரது வழக்கம் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு சென்ற பிரதேசசபை உறுப்பினர், வெளிநாடு செல்வதற்காக கொழும்பு நோக்கி சொகுசு பேருந்தில் பயணித்தபோது யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் பேருந்தை வழிமறித்த பொலிசார் சந்தேக நபரை கைது செய்ததாக கூறப்படுகின்றது.