முகநூல் விளம்பரத்தை நம்பியதால் பறிபோன உயிர்..!!

யாழ்ப்பாணத்தில் முகநூலில் விளம்பரப்படுத்த பட்டிருந்த அக்குபஞ்சர் வைத்தியம் தொடர்பான பதிவை நம்பி சென்ற நபர் ஒருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார்.64 வயதுடைய அச்சுவேலி வளலாய் கிழக்கைச் சேர்ந்த மாணிக்கம் சற்குணராஜா என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த நபர் முகநூல் விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் வைத்தியர் எனக் கூறப்படுவரால் நடத்தப்படும் சிகிச்சை நிலையத்தில் தனது இரண்டு முழங்காலிலும் ஊசியால் குத்தும் வகையில் சிகிச்சை பெற்றுள்ளார்.பின்னர் இரு கால்களிலும் வீக்கமும் வலியும் ஏற்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் இறந்துள்ளார். அக்குபஞ்சர் சிகிச்சை மூலம் முழங்காலில் ஊசி செலுத்தப்பட்டு உடல் முழுவதும் பரவியதால் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக மரணம் ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் அக்குபஞ்சர் சிகிச்சை முறைக்கு எவ்வித பதிவும் இல்லை என்பதுடன் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்தவர்கள் முகநூலிலோ வேறு எந்த முறையிலுமோ விளம்பரம் செய்ய முடியாதென்பது அடிப்படை விதியாகும்.யாழ்ப்பாணத்தில் போலி மருத்துவர்கள் விளம்பரம் செய்வதன் மூலம் தவறான மருத்துவ சிகிச்சைகளில் ஈடுபடுகின்றனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *