யாழ் வைத்தியசாலையின் ஆண் தாதி ஒருவர் அதிரடியாக கைது..!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி சவுகச்சேரி ஆதார வைத்தியசாலையின் உயர் அதிகாரி ஒருவரை வைத்தியசாலையில் கடமையாற்றும் போது தாக்கிய குற்றச்சாட்டில் அதே வைத்தியசாலையில் பணியாற்றும் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சவுகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் ஆண் தாதி ஒருவர்,தனக்கு கிடைக்க வேண்டிய‌ உரிய சம்பளம் மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு வழங்காததால்,

சம்பந்தப்பட்ட மேல்நிலை அதிகாரியை வினவியதுடன் திடீரென தாக்கியுள்ளார்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மேல்நிலை அதிகாரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சம்பந்தப்பட்ட தாதியைக் கைது செய்துள்ளனர்.