பிரேத பரிசோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!! இறந்தவரின் உடலில் காணப்பட்டது என்ன..?

பலாங்கொடை பகுதியில் உயிரிழந்த நபர் ஒருவருக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்ட போது இறந்தவரின் நுரையீரல் பகுதியில் பல் ஒன்று காணப்பட்டதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த நபர் நிமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கபட்டு உயிரிழந்தவர் என தெரியவந்துள்ளது.59 வயதுடைய பலாங்கொடை வலேபொட பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் பிரேத பரிசோதனையின் போதே இவ்வாறு பல் காணப்பட்டுள்ளது.

பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் நேற்று (27) இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போதே நுரையீரலில் பல் காணப்பட்டதாக பலாங்கொடை அவசர மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்துள்ளார்.இறந்தவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், நீண்டகாலமாக நிமோனியா மற்றும் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இருந்தே அவரது நுரையீரலில் பல் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.