சில தினங்களிற்குமுன் காணமல்போன யுவதி..?குடும்பத்தினருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்..!

வெலிப்பன்ன பகுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல்போயிருந்த யுவதி சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நீரில் மூழ்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்ணின் சடலம், 5 கிலோமீற்றர் தொலைவில், வெலிப்பன்ன கால்வாய் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.வெலிப்பன்ன ஹிஜ்ரா மாவத்தையை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன் யுவதியின் தந்தை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸ் நாயின் உதவியுடன் பொலிஸார் சடலத்தை கண்டுப்பிடித்துள்ளனர்.
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக களுத்துறை நாகொட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.யுவதியின் மரணத்திற்கு காரணம் என்னவென்று மேலும் பொலிஸார்கள் விசாரித்து வருகின்றனர்.