மொழிப் பிரச்சினையால் நடந்த கருக்கலைப்பு..!! அலட்சியத்தால் ஏற்பட்ட விபரீதம்..!

நான்குமாத கர்ப்பிணியான வெளிநாட்டு பெண் ஒருவர் புலோவ்கா பல்கலைக்கழக மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்காக வந்துள்ளார்.அப்போது, ​​அங்கு பணிபுரியும் ஊழியரிடம் தனது சோதனை குறித்து கூறியுள்ளார்.ஆனால் அவர் பேசிய மொழி புரியாத மருத்துவமனை ஊழியர்கள், அந்த பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என தவறாக கருதி, உரிய வார்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு ஏற்கனவே வேறு பெண்ணுக்கு கருக்கலைப்புக்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர்.அந்த வார்டில் உள்ளவர்களும் சரியாக விசாரித்து உறுதி செய்யாமல் ஆரோக்கியமாக இருந்த அந்த பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கருக்கலைப்பு செய்துள்ளனர்.இந்த சம்பவம், கடந்த மாதம் 25-ம் திகதி செக் குடியரசில் உள்ள மருத்துவமனையில் நடந்துள்ளது. மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் ஆகியோரால் அந்த பெண்ணை சரியாக அடையாளம் காண முடியவில்லை.

நடந்த தவறுக்கு மொழித் தடையுடன் அலட்சியமும் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தவறான சிகிச்சைக்கு காரணமான ஊழியர்களை மருத்துவமனை நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *