எனக்கு அந்த மாதிரி விசயத்தில எல்லாம் பயம் இல்ல..!!நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட போட்டோவுடன் கூடிய பதிவு..!

தென்னிந்திய நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் மிகவும் பிரபலமானவர். இவர் தமிழில் கடைசியாக நடித்த மாமனன் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து, தற்போது அவர் கைவசம் சைரன், ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி மற்றும் ரகு தத்தா ஆகிய திரைப்படங்கள் உள்ளன.மற்றும் ஹிந்தியிலும் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

ஆம், வருண் தவான் ஹீரோவாக நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இருவரும் ஒன்றாக ஆட்டோவில் சென்ற வீடியோ கூட வைரலானது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்க திரைப்படம் நடிக்கும் நடிகர்கள் கட்டடாயம் எல்லோரும் சமுகவலைத்தளங்களில் தங்களது கவர்ச்சி மற்றும் வெளியில் செல்லும் அவர்களது முக்கியமான நிகழ்வு போட்டோக்களை பதிவிடுவது வழக்கம்.

இதைப் பார்த்து ரசிகர்களும் குஷியாகிவிடுவார்கள்.தற்போது கீர்த்தி சுரேஷ் துபாயில் உயரமான கட்டிடத்தில் இருக்கும் கிளாஸ் பிரிட்ஜில் இருக்கும் புகைப்படங்களை “தனக்கு உயரத்தை பார்த்து பயம் எல்லாம் இல்லை” என குறிப்பிட்டு தனது இன்ஸ்டாபக்கத்தில் பதிவிட்டுள்ளார் இது தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருகின்றது.