மன்சூர் அலிகானுக்கு எதிராக பேசிவிட்டு…இப்பொழுது த்ரிஷா செய்த காரியம்..!

கடந்த வாரங்களில் சோஷியல் மீடியாவில் அதிகம் பேசப்பட்டு வருந்தது தான் த்ரிஷா மன்சூர் அலிகான் சர்ச்சை,அதாவது முன்பெல்லாம் கதாநாயகிகளை கற்பழிக்கும் காட்சிகள் சினிமாவில் இருக்கும். வில்லன் நடிகர்கள் எல்லாம் அந்த நடிகையை தூக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் அப்படி இல்லை. த்ரிஷாவோடு ஒரு படுக்கறை காட்சி கூட இல்லை. படப்பிடிப்பில் அவரை பார்க்கவே இல்லை என மன்சூர் அலிகான் பேசியிருந்தார்.இது த்ரிஷாவிற்கு மிக கோபத்தை ஏற்படுத்தியது அதுமட்டுமல்லாது இவர் இது குறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டு இதற்கு பல சினிமாபிரபலங்களும் ஆதரவாக பேசியிருந்தனர்,இது குறித்து த்ரிஷாவிடம் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சனை முடிவிற்கு வந்தது.இவ்வாறு இருக்க இப்போழுது அனிமல் என்கிற ஹிந்தி திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் த்ரிஷா.

வெளியாகிய முதல் நாளே அதிக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது அனிமல் திரைப்படம்.இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆணாதிக்க தன்மையை பிரதிபலிப்பதாகவும், சமூகத்தை தவறான பாதைக்கு கொண்டு போகும் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இதற்கு நடுவே த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சிறப்பான திரைப்படம் அனிமல் என பதிவிட்டுள்ளார்.இவ்வளவு நாள் பெண் உரிமை என பேசிய த்ரிஷா இப்போது இந்த படத்திற்கு எப்படி சப்போர்ட் செய்கிறார்,மன்சூர் அலிகானுக்கு எதிராக பேசிவிட்டு இப்போது இவர் செய்வது சரியா…என பல கேள்விகள் சோஷியல் மீடியாவில் எழுந்து வருகிறது.இது குறித்து அறிந்த த்ரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்ததை நீக்கியுள்ளார்