வடிவேலு கேட்டார்ன்னு பண்ணேன்..!என் சினிமா வாழ்க்கையே போச்சு…

நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான மாயி திரைப்படத்தில் நடிகர் வடிவேலு காமெடியனாக நடித்திருந்தார். அது எல்லோருக்கும் தெரிந்ததே இந்த படத்தில் இடம்பெற்ற மற்றுமொரு காமெடி காட்சி ரசிகர்கள் மத்தியில் இன்றளவும் பிரபலமான ஒன்று. அதுதான்.. “வாம்மா மின்னல்..” என்ற காமெடி காட்சி இந்த காட்சியில் மணப்பெண்ணாக நடித்திருந்தவர் பெயர் நடிகை தீபா. இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு நடிகர் வடிவேலு மூலமாக தான் அவருக்கு கிடைத்திருக்கிறது. நடிகர் வடிவேலு இந்த காட்சியின் படப்பிடிப்பின் உங்களுடைய கண்ணை கோணலாக வைத்துக் கொண்டு நடியுங்கள் அது இந்த காட்சிக்கு என்னும் சிறப்பு சேர்க்கும் என்று கூறினார்.

சரி என்று செய்தேன். ஆனால் அதுவே எனக்கு மிகப்பெரிய பிரச்சினையாகி விட்டது. என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு கேள்விக்குறியாக அந்த காட்சி அமைந்துவிடும் என நான் நினைத்து கூட பார்க்கவில்லை,அந்த காட்சி மிகவும் பிரபலமாகியதால் அதை பார்த்த இயக்குனர்கள் எனக்கு உண்மையாகவே கண் அப்படிதான் இருக்கும் என நினைத்து விட்டார்கள்.அதனால் தான் தங்களுடைய படங்களில் நடிக்க என்னை பற்றி யோசித்துப் பார்க்கவில்லை என கூறினார்கள். நானே பல இயக்குனர்கள் இது பற்றி கதைக்கும் போது கேட்டுள்ளேன்.இதை எத்தனை பேருக்கு நான் சொல்லி புரிய வைக்க முடியும். அதன் பிறகும் சில திரைப்படங்களில் நடித்த அரசு, சாக்லேட், ஆளுக்கு ஒரு ஆசை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தேன்.ஆனால், எனக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை,இருப்பினும் என்னுடன் அறிமுகமான பல நடிகைகள் இன்னும் பல திரைப்படங்கள் நடித்து வருகின்றனர்,ஆனால் நான் நடித்த அந்த ஒரு காட்சியால் எனக்கு பல வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது.என நடிகை தீபா வருத்தத்துடன் கூறியுள்ளார்.