திரைப்பட நடிகைகள் எல்லாம் பணம் குடுத்து இதெல்லாம் பன்றாங்க..!! நடிகை பிரியாமணி ஓப்பன் டாக்..!

முத்தழகு என்ற பெயரை கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருவது நடிகை பிரியாமணி தான்.அமீரின் இயக்கத்தில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் பருத்திவீரன் இந்த திரைப்படத்தில் பிரியாமணி முத்தழகு என்ற கதாபத்திரத்தில் அவரது அபார நடிப்பை கதாநாயகியாக வெளிக்காட்டியிருந்தார்.இந்த திரைப்படம் மூலம் இவருக்கு அதிக ரசிகர்கள் மட்டும் இல்லாமால், அவர் நடித்த முத்தழகு ரோலுக்காக தேசிய விருதும் கிடைத்தது. அதிக படங்களில் நடிக்காவிடிலும் இவருடைய முத்தழகு கதாபாத்திரமானது இன்றுவரை மக்களால் பேசப்பட்டு வருகிறது.தற்போது நடிகை பிரியாமணி படங்களில் குணச்சித்திர வேடங்கள் மற்றும் டிவி ரியாலிட்டி ஷோக்களில் ஜட்ஜாக பங்கு பற்றி வருகிறார் வருகிறார்.

சமீபத்தில் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் ஆன ஜவான் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.சமீபத்தில் அவர் நடிப்பில் தெலுங்கில் பாமகலாபம் என்ற படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆகி இருந்தது.நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கும் நடிகை பிரியாமணி சமீபத்தில் நடிகைகள் செய்யக்கூடிய பப்ளிசிட்டி ஸ்டன்ட் குறித்து தன்னுடைய பார்வையை பொதுவெளியில் ஓப்பனாக பேசியிருக்கிறார்.நடிகர் நடிகைகள் ஏர்போர்ட், ஜிம், ஹோட்டல் என செல்லும்போது பத்ரிக்கையாளர்கள் அவர்களை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவார்கள். ஆனால் அது தற்செயலாக நடப்பது இல்லை.இதற்கு ஸ்பாட்டட் என்று தலைப்பு வைத்து இணையத்தில் உலவ விடுவார்கள்.

இந்த கொடுமையெல்லாம் நடிகைகளே பணம் கொடுத்து செய்கிறார்கள் என்பதுதான் நடிகை பிரியாமணி கூறியுள்ள தகவல்.இதற்கென தனி ஏஜென்சிகள் உள்ளன, நடிகைகள் தாங்கள் எங்கு செல்கிறோம் என்று ஏஜென்சியிடம் கூறும்போது, ​​நடிகையை சுற்றி படம் எடுக்க ஐந்து முதல் பத்து போட்டோகிராபர்களை அங்கு அனுப்புகிறார்கள்.இதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்கிறார்கள் நடிகைகள்..தற்போது இது ஒரு டிரெண்டாகவே மாறிவிட்டது… அவர்கள் தரும் விலை அதிகம் என்றோ..? குறைவு என்றோ..? நான் சொல்லவில்லை. என்னிடமும் இதுபோல செய்து கொடுக்கிறோம் உங்களுக்கு இந்த சேவை வேண்டுமா.. இவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டனர்.அப்படிப்பட் சேவை எனக்கு தேவையற்ற ஒன்று இது ஒரு தேவையில்லாத கலாச்சாரம். பாலிவுட் திரை உலகை தாண்டி இந்த பழக்கம் தற்போது தமிழ் சினிமாவிலும் வந்துவிட்டது என கூறியுள்ளார். இது தற்போது சமூகவலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி அனைவராலும் பேசப்பட்டு வருகிறது.