தடியால் அடித்து கொள்ளப்பட்ட முன்னாள் இராணுவ வீரர்..!!

முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டு தடிகளால் அடித்து கொலைசெய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் களுத்துறை – தெம்புவன பேகமுவ பகுதியில் இடம் பெற்றுள்ளது.அதே பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய முன்னாள் இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி 8 இலட்சம் ரூபாவை இரண்டு பேரிடம் மோசடி செய்த சம்பவத்தின் அடிப்படையிலேயே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பான மோசடியில் சிக்கியதாக கூறப்படும் இருவர் வேறு ஒருவருடன் சேர்ந்து இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.