கைத்தொலைபேசி பாவனையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு..!! குறுஞ்செய்திகளினால் வரும் ஆபத்து..!

தினசரி கைத்தொலை பேசி பாவிக்கும் போது தொலைபேசிக்கு வரும் குறுஞ்செய்திகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும் சில தனிப்பட்ட குறுஞ்செய்திகள் இணைப்பு மூலம் உங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறுவதற்கான மோசடியான செயற்பாடுகள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகளில் வரும் இணைப்புகள் உங்களை ஏமாற்றும் வகையில் சில பரிசுத்தொகையை வெல்வது அல்லது வேலை வாய்ப்பை வழங்குவது என்ற போர்வையில் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.எனவே, அத்தகைய இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சில சமயங்களில் இந்த லிங்கை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் மொபைல் போனில் போலி மென்பொருள் நிறுவப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.