சுற்றிவளைப்பில் பொலிஸாரிடம் சிக்கிய அழகிகள்..!! தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி..!!

யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக தங்கும் விடுதியாக செயற்பட்ட விபச்சார விடுதி ஒன்று திடீரென பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டதாகவும் அங்கிருந்த அழகிகள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு (24/04/2024) சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அண்மையில் தங்கும் விடுதியென்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே இவ்வாறு காவல் துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது, விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் 4 அழகிகளும், விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்.விடுதியில் உள்ள அழகிகளை தொலைபேசி எண்கள் மூலம் பலர் தொடர்பு கொண்டு அங்கு சென்றது தெரியவந்துள்ளது.