யாழில் காதலன் செய்த திடுக்கிடுவைக்கும் சம்பவம்..!! ஒருவர் உயிரிழப்பு..!

சந்தேக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி காதலியையும், காதலியின் தாயையும் காயப்படுத்திவிட்டு தானும் தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனிப்புலம் பகுதியில் வசித்து வந்தவரே உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.00 மணியளவில் யுவதியின் வீட்டிற்குள் நுழைந்து குறித்த யுவதி மீதும் அவரது தாயார் மீதும் கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.அதன்பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்று வெற்றுக் காணி ஒன்றில் உயிர்மாய்த்துள்ளளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், தாக்குதலுக்கு உள்ளான யுவதியும் அவரது தாயும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.