ஹிப் ஹாப் கலைஞரால் கண் கலங்கிய நடிகை சமந்தா..!

ரியாலிட்டி ஷோ ஒன்றில் நடுவராகப் கலந்து கொண்ட‌ சமந்தா மனம் உடைந்து அழுதுள்ளார்.இது தற்போது சோஷியல் மீடியாவில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் கடைசியாக குஷி படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சென்னை ஸ்டோரிஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.மற்றும் வெளியூர் பயணம், நண்பர்களுடன் பயணம் செய்வதிலும் ஆர்வம் காட்டிவருகிறார். இவ்வாறு இருக்க சமந்தா சமீபத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடுவராக கலந்து கொண்டார். அப்போது கிராவிட்டி என்ற ஹிப்-ஹாப் கலைஞர் தானே இசையமைத்த ஜலாலுதீன் என்ற பாடலைப் பாடினார்.இதைக் கேட்ட சமந்தா கண்ணீர் விட்டார். இந்த பாடல் தான் நோயால் அவதிப்பட்டபோது தைரியத்தை கொடுத்ததாக சமந்தா குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை கிராவிட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.