அடுத்த வருட தொடக்கத்தில் இருந்து எரிபொருள் விலையில் மாற்றம்..!

ஜனவரி முதலாம் திகதி முதல் பெறுமதி சேர் வரி (VAT) அமுல்படுத்தப்படவுள்ளதால் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம் குறித்து நிதி அமைச்சின் வரி ஆலோசகர் தனுஜா பெரேரா தெரிவித்துள்ளார்.ஜனவரி மாதம் முதல் வரி(வாட்) 18 சதவீதம் அதிகரிக்கப்படும் என முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி எரிபொருளுக்கான வரி 18 வீதத்திலிருந்து 7.5 சதவீதம் நீக்கப்பட்டு 10.5% மட்டுமே விதிக்கப்படவுள்ளது.

மேலும் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு 2.5% நீக்கப்பட்ட நிலையில் எரிவாயுக்கான VAT விகிதம் 15.5% விதிக்கப்படவுள்ளது.இதன்படி, ஜனவரி 1ஆம் திகதி முதல் ஒக்டேன் 92 பெற்றோல் 380.00 ரூபாவாகவும், ஒக்டேன் 95 பெற்றோல் 468.00 ரூபாவாகவும், டீசல் 361.00 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 477.00 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேற்குறிப்பிடப்பட்ட எரிபொருள் விலைகள் அண்ணளவாக கணிக்கப்பட்டதுடன் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *