விருந்தினர் விசாவில் கனடாவிற்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள‌ மாற்றம்..!!

விருந்தினர் விசாவில் கனடாவுக்குச் செல்லும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.2023 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை, பெருமளவிலான இலங்கையர்கள் கனடாவிற்கு விருந்தினர் விசாவில் பயணம் செய்துள்ளனர்.இருப்பினும் விருந்தினர் விசாவில் தற்போது செல்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கனடாவில் விருந்தினர் விசா தொடர்பில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.எனினும், ஏற்கனவே கனடா சென்றவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் புதிதாகச்செல்ல தமிழர்கள் அச்சப்படுகின்றனர்.

வேலையில்லா பிரச்சனை மற்றும் கனடாவில் வாடகை வீடுகளை வாங்க முடியாத பிரச்சனை ஆகியவை இவற்றில் முக்கியமானவையாகும்.பல கோடிகளைச் செலவு செய்து கனடா சென்ற தமிழர்கள் அங்கு வாழ முடியாது என்பதை உணர்ந்த நிலையில் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *