கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரிக்கை..!!சமூக வலைத்தளங்களில் இவ்வாறு செய்வதை தவிர்க்கவும்..!

பாஸ்போர்ட், அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்த வேண்டாம் என சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களிடம் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த வகையில், உரிமையாளர்களை கண்டறியும் வகையில் அடையாள அட்டைகள், கடவுச்சீட்டுகள் போன்றவற்றை சமூக வலைத்தளங்களில் காட்சிப்படுத்துவதன் மூலம் பல‌ குற்றச் செயல்கள் இடம்பெறலாம் கணினி குற்றப்புலனாய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

தொலைந்து போன பணப்பையை அதன் உரிமையாளர்களுக்குத் திருப்பித் தருவதற்காக சிலர் பணப்பையில் உள்ள அடையாள அட்டை, பாஸ்போர்ட், அலுவலக அடையாள அட்டைகள் , ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை புகைப்படம் எடுத்து பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் காட்டுகின்றனர்.இருப்பினும், இவ்வாறு தனி நபர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை சமூக ஊடகங்களில் காட்சிப்படுத்துவதன் மூலம், குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களுக்கு அந்த தகவல்களைப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சந்திம அருமப்பெரும சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *