கைது செய்யச்சென்ற பொலிஸாருக்கு ஆட்டம் காட்டிய பெண்..!! நீண்டகால போதைப்பொருள் வியாபாரி!

தனது அந்தரங்க பகுதியில் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்த தமிழ் பெண் ஒருவர் மட்க்க‌ளப்பு பகுதியில் வைத்து பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரம் செய்துவந்த 45 வயதுடைய பெண் ஒருவரே குறித்த சம்பவத்தில் கைதாகியுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இதன்போது குறித்த சந்தேகநபரிடம் இருந்து ஐந்து இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 12 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.மட்டக்குளி பொலிஸ் விசேட பணியகத்தினருக்கு கிடைத்த விசேட தகவலுக்கமைய , சந்தேகநபரான பெண்ணின் வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

பெண் பொலிசார், சந்தேகநபரை சோதனையிட்ட போது, அவரது மார்புக் கச்சைக்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபரை வீட்டின் ஒரு பகுதியில் வைத்து பொலிசார் விசாரணை நடத்திக் கொண்டிருந்த போது, அவர் திடீரென சமையலறை பக்கமாக ஓடிச்சென்று, கழிவு நீர் செல்லும் வாய்க்காலுக்குள் குதித்துள்ளார்.கழிவு நீருக்குள் இருந்தபடி. தனது மார்புக் கச்சைக்குள்ளிருந்த போதைப்பொருள் பொதியை வெளியே எடுத்து எறிந்துள்ளார். இதனை தொடர்ந்து மற்றுமொரு மேலதிக பொலிஸ் குழு ஸ்தலத்திற்கு வரவழைக்கப்பட்டு, பெரும் பிரயத்தனத்தின் பின் சந்தேக நபரை கைது செய்தனர்.சந்தேக நபர் போதைப்பொருளுடன் பல தடவைகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *