தந்தைக்கு தாயும் மகனும் சேர்ந்து செய்த கொடுமை..!! விசாரணையில் தெரிய வந்த உண்மைகள்..!

குடும்ப தகராறு காரணமா மனைவி மற்றும் மகனால் கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரின் சடலம் ஹிதோகம திவுல் ஏரியில் இருந்து மீட்டகப்பட்டுள்ளது.நேற்று முன் தினமான (09/04/2024) அன்று அனுராதபுரம் ஹிதோகம திவுல் ஏரியில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதுடன்,குறித்த சடலமானது பல துணிகளில் சுற்றப்பட்டு கிரானைட் கல்லில் கட்டி ஏரியில் விடப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது.

குறித்த நபரின் பிரேத பரிசோதனையில் அவர் கூரிய ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. பொலிஸாரால் மேற்கொண்ட தேடுதலின் போது, ​​உயிரிழந்தவர் தங்கஹகடவல பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கொலை செய்யப்பட்ட நபரின் 39 வயதுடைய மனைவி மற்றும் 24 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​கடந்த 8 ஆம் திகதி காலை 9 மணி அளவில் தாய் தந்தைக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், மகனும் தலையிட்டதில், குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொலையின் பின்னர் சடலத்தை ஏரிக்கு எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டியையும் பொலிஸார் சந்தேகநபர்களின் வீட்டில் இருந்து மீட்டுள்ளனர்.அன்றைய தினம் மாலை ஏரிக்கு சடலம் கொண்டு வரப்பட்டதாகவும் கூறியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிதோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.