இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இரு பிள்ளைகளின் சடலம்..!! தந்தையின் விபரீத முடிவு..!

தனது இரண்டு பிள்ளைகளையும் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்ய முயற்சித்த தந்தை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவமானது அம்பாறை பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாக்கியதுல் சாலியா பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (14/03/2024) காலை இடம்பெற்றுள்ளதுடன், சம்பவ இடத்தில் இரத்த வெள்ளத்தில் இருந்து இரு பிள்ளைகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,குறித்த சம்பவத்தில் முஹம்மது கலீல் முகம்மது றிகாஸ் (வயது-29) மற்றும் முஹம்மது கலீல் பாத்திமா பஸ்மியா (வயது-15) ஆகியோர் சம்பவ இடத்தில் படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தவர்களாவர்.

குழந்தைகள் இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது.அத்துடன் வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.குறித்த பிரேத பரிசோதனை அம்பாறை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவராத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.