தபால் திணைக்களம் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை..!!

தற்போது இலங்கையில் இணையவழி நிதி மோசடி அதிகரித்து வருகிறது.இது தொடர்பாக கையடக்க குறுஞ்செய்தி ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பில் இலங்கை தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது குறித்து தபால் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மோசடி செய்பவர்கள் வங்கி அட்டை விபரங்களை மோசடி மூலம் திருடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தபால், இலங்கை தபால் திணைக்களம், SL Post மற்றும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆகியவற்றின் அடையாளங்களைப் பயன்படுத்தி இந்த மோசடி மேற்கொள்ளப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.எஸ்.எம்.எஸ் மூலம் வங்கி விவரங்களைக் கோருவதில்லை என்றும் பொதிகள் கையாளும் பரிவர்த்தனைகளுக்கு வங்கி அட்டைகளைப் பயன்படுத்துவதில்லை என்றும் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.எனவே, மோசடி செய்பவர்களிடமிருந்து வரும் போலி எஸ்எம்எஸ் செய்திகளின் அடிப்படையில் பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்கு அல்லது வங்கி அட்டை விவரங்களைப் பகிர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *