கூகுள் மேப் மூலம் வந்த விபரீதம்..!! இருவர் கைது..!

கூகுள் மேப்பை பயன்படுத்தி அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,சனிக்கிழமை (03) இரவு களியாட்ட விடுதி ஒன்றுக்கு மென்பொருள் பொறியியலாளர் ஒருவரும் கப்பலில் பணிபுரியும் நபர் ஒருவரும் சென்றுள்ளனர்.

அங்கு சென்று மது அருந்திவிட்டு முகாந்திரம் வீதியில் உள்ள தங்குமிடத்திற்கு செல்ல கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளனர்.இந்நிலையில், கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்ற போது அவர்கள் அலரிமாளிகை வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர்.இதன்போது, ​​பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.