முயற்சியில் தோல்வி..!!ஏமாற்றமடைந்த பொலிஸார்கள்..!

விடுதலைப்புலிகள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவிற்கு அமைய முல்லைத்தீவு, கிளிநொச்சி வீதியில் கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குமாரசாமிபுரம் கிராம அலுவலகர் பிரிவில் றெட்பானா சந்திக்கு அருகில் உள்ள காணியில் அரைக்கும் ஆலை அமைந்துள்ள கட்டிடத்திற்குள்ளும், அந்த காணிக்குள்ளும் கடந்த இரண்டு நாட்களாக தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட வந்த நிலையில் எதுவும் கிடைக்காததால் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த காணியில் விடுதலைப் புலிகள் தங்கம் புதைத்துள்ளதாக நம்பத்தகுந்த நபர் ஒருவர் தெரிவித்ததன் பிரகாரம், ஏற்கனவே சிலர் தர்மபுரம் பொலிஸாரால் சட்டவிரோதமாக தோண்டுதல் முயற்சியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தர்மபுரம் பொலிசார் நீதிமன்றத்தின் அனுமதியை கோரி நேற்றும் இன்றும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்வுகள் செய்யப்பட்ட இடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அரைக்கும் ஆலையின் கட்டடத்திற்குள் ஒருபகுதி சுமார் 6 அடிக்கு மேல் தோண்டப்பட்ட போதும் எதுவும் கிடைக்கவில்லை இதனை விட காணியின் பின்பக்கத்தில் இரு இடங்களில் கனரக இயந்திரம் கொண்டு நிலத்தில் சுமார் 10 அடிவரை தோண்டப்பட்ட போதும் எதுவும் காணாத நிலையில் குறித்த பகுதிகளை மூட பணிக்கப்பட்டுள்ளது.இந்த தோண்டும் நடவடிக்கைக்காக காணியினை சுற்றி பெருமளவான இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *