பல்கலைக்கழக மாணவனை பலவந்த மாக‌ கடத்திய சக மாணவர்கள்..!

கடத்தப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மாணவர்களால் கடத்திய காரையும் பொலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கடத்தப்பட்ட மாணவன் தனது தந்தையை கடந்த 4 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பியுள்ளார்.பின்னர், களுபோவிலவில் ஆசிர‌மாவத்தையில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியேறும் போதே குறித்த மாணவன் கடத்தப்பட்டுள்ளார் என பொலிசார் கூறியுள்ளனர்.

தெஹிவளை மாநகர சபைக்கு அருகில் மாணவன் பயணித்த சொகுசு காரை வழி மறித்து வேனில் இருந்து இறங்கிய நான்கு இளைஞர்கள் மேற்படி காரில் ஏறி காருடன் மாணவனையும் கடத்திச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.