அந்த மாதிரி படங்களை பார்க்க மாட்டேன்..!! ஆனால் நடிப்பேன்.. நடிகை ஆண்ட்ரியா ஓப்பன் டாக்..!

2007 ஆம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் சரத்குமாருடன் இணைந்து கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஆண்ட்ரியா.நடிகை, பாடகி, Voice Over Artist என பன்முக தன்மை கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா.பச்சைகிளி முத்துச்சரம் படத்திற்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் இவரின் நடிப்பை பற்றி பேசப்பட்டது.

அதன் பிறகு தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து கிடைக்க மங்காத்தா, ஒரு கல் ஒரு கண்ணாடி, விஸ்வரூபம், அரண்மனை, தரமணி , துப்பறிவாளன், விஸ்வரூபம் 2 ,வடசென்னை, மாஸ்டர்உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.நிறைய ஹிட் படங்களில் நடித்துவரும் ஆண்ட்ரியா இப்போது அதிகம் இசைக் கச்சேரிகளில் பாடி வருகிறார். அவரது குரலுக்கு இல்லாத ரசிகர்களே இல்லை என்றே கூறலாம்.

தொடர்ந்து கச்சேரிகளில் பாடி நடிகையாக நடித்து வரும் ஆண்ட்ரியா தற்போது “கா” என்ற படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் கா திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒரு பேட்டி அளித்த ஆண்ட்ரியா,“நான் ஹாரர்ஸ், வயலன்ஸ் உள்ள படங்களை பார்க்கமாட்டேன். அந்த மாதிரியான படங்களை பார்க்க எனக்கு பிடிக்காது.இருந்தாலும் அதே மாதிரி படங்கள் வந்தால் நடிப்பேன். “பார்ப்பது வேறு, நடிப்பு வேறு” என்றார். அவரது பேட்டி சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.