நான் எதை செய்தாலும் அவரிடம்தான் கேட்டு செய்வேன்..!! நடிகை ராஷ்மிகா பேட்டி..!

திரை உலகில் ஒரு நடிகையும் நடிகரும் பிரபலமானாலும் அத்தோடு அவர்கள் அழகாக இருந்தாலும் அவர்கள் நிஜ வாழ்க்கையில் இணைய வேண்டும் என்று தான் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள்.இவ்வாறு தற்போது பல சினிமா பிரபலங்களும் தமது நிஜ வாழ்க்கையில் இணைந்துள்ளனர் உதாரணமாக சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, பிரசன்னா-சினேகா, விக்னேஷ் சிவன்-நயன்தாரா போன்றவர்களை எடுத்துக்கொள்ளலாம்.

அப்படி இப்போது வெள்ளித்திரையில் இந்த ஜோடி நிஜத்தில் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் ஆசைப்படுவது விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா தான்.இப்படி விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா பற்றி நிறைய செய்திகள் உலா வர நடிகை அண்மையில் ஓரு பேட்டி கொடுத்துள்ளார்.அதில் அவர் பேசும்போது, என் வாழ்க்கையில் எது நடந்தாலும் விஜய் தேவரகொண்டாவிடம் ஆலோசனை கேட்டு தான் செய்வேன்.நான் என்ன சொன்னாலும் அதற்கு ஆம் என்று சொல்லக்கூடியவர் இல்லை, நல்லது கெட்டதை அறிந்து சொல்வார். என் வாழ்நாளில் எல்லோரையும் விட எனக்கு அவர் ஆதரவாக இருக்கிறார், நான் உண்மையில் மதிக்கும் முக்கிய நபராக இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *