இந்த பிரச்சனையால தான் எனக்கு 43 வயசு வரைக்கும் கல்யாணம் ஆகல..!! வெளிப்படையாக பேசிய லாவண்யா தேவி..!

சின்னத்திரையில் பல பிரபலங்களின் முகங்களைத் தவிர, நம்மில் பலருக்கு அவர்களின் பெயர்கள் கூட தெரியாது.அப்படி சின்னத்திரையில் இருந்து திரைப்படத்தில் பிரபலமானவர் தான் நடிகை லாவண்யா தேவி.பல திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ள இவர்,தற்போதும் திரையில் மும்முரமாக இயங்கி வருகின்றார்.

கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான சூரியவம்சம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான லாவண்யா தேவி, அதனை தொடர்ந்து படையப்பா, சேது, தெனாலி, சுந்தரா டிராவல்ஸ் என சுமார் 50’இருக்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு துணை காதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.சின்னத்திரையில் பிஸியான நடிகையான இவர் தற்போது அருவி என்ற தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் ஒரு பேட்டியில் தனது திருமணம் பற்றி பேசியுள்ளார்.

அதில், தனக்கு 43 வயது வரை திருமணம் நடக்காததற்குக் காரணம் குடும்பச் சூழல்தான் என்றும் எனக்கு பெரிய அளவில் வருமானம் இல்லாததால் அடுத்தடுத்த வேலைகளிலேயே கவனத்தை செலுத்திக் கொண்டிருந்ததாக கூறியுள்ளார்.லாவண்யா தேவி தனது குடும்பம் தனக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருவதாகவும், திருமண நிகழ்ச்சி ஒன்றில் தான் முதல் முறையாக தனது கணவரை சந்தித்ததாகவும் அதன் போது அவருடன் நட்பாகத் தொடங்கி பந்தம் காதலாகி தற்போது கல்யாணத்தில் முடிந்தது என பேசியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *